Skip to main content

விமர்சனம் : ' கொட்டுக்காளி '!

ஒரு சுயாதீன இயக்குநரின் திரைப்படத்திற்கு திரையரங்குகளில் இத்தகைய ஓப்பனிங் இருப்பது தமிழ் சினிமாவில் முதல் முறையாகும். இந்திய சினிமாவின் அடுத்த கட்ட முன்னெடுப்பு சுயாதீன சினிமா தான் என்று முழுமையாக சொல்ல முடியாது என்றாலும் அதற்கான முதல் படியாகவே பி.எஸ். வினோத் ராஜின் ' கொட்டுக்காளி ' திரைப்படத்தை பார்க்க முடிகிறது. இது வர்த்தக சினிமாவில் நடந்தமைக்கு முக்கிய காரணம் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகர் சூரியின் சமீபத்திய அசுர வளர்ச்சி. வர்த்தக சினிமாவில் இத்தகைய மாற்றம் நடைபெறுவது தமிழ் சினிமாவிற்கு மிக ஆரோக்கியமான விஷயமே.

ஒன்லைன்:

மதுரையை சேர்ந்த கிராமத்து இளைஞர் சூரி. அவரது முறை பெண்ணாக ஆனா பென். ஆனா பென்னுக்கு பேய் பிடித்ததாக சொல்லப் படுகிறது. அதை ஓட்டுவதற்காக ஒரு சாமியாரிடம் அழைத்து செல்ல கிலம்புகின்றனர் சூரி மற்றும் குடும்பத்தினர். இந்தப் பயணத்தில் வரும் தடங்கள், அதில் வெளி வரும் கதாபாத்திரங்களின் நோக்கங்கள், அந்த நிலத்தின் வாழ்வியல் இதுவே ' கொட்டுக்காளி '.

அனுபவ பகிர்தல் :

இந்தத் திரைப்படம் ஏற்கனவே பெர்லின் திரைப்பட விழா உட்பட பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு மிகுந்த பாராட்டுகளைப் பெற்று வந்த செய்திகளை நாம் படித்திருப்போம். அப்படிப் பட்ட ஒரு முழு சுயாதீன தன்மை கொண்ட கலைப் படத்தை நம்ம ஊர் கமலா தியேட்டரில் முதல் காட்சி பார்த்த அனுபவமே தனி தான்.

படத்தின் தொடக்கம் முதல் எண்டு கார்டு வரை எந்த வித இசையும் இல்லாது இருந்த ஒரு படத்தை அவ்வளவு மக்களுடன் பார்த்து புதுமையாக இருந்தது. படத்தின் தொடக்கத்தில் இத்தகைய திறைமொழிக்கு பழக்கம் இல்லாத சிலர் கூச்சலிட்டதையும் காண முடிந்தது.

ஆனால், மெல்ல மெல்ல அந்தக் கதாபாத்திரங்களின் பயணத்திற்குள் நம்மை கொண்டு செல்லும் ' கொட்டுக்காளி ' நம்மை சுவாரஸ்யமாக வைத்திருக்கவும் தவறவில்லை.

நாமும் அவர்களுடன் பயணித்து அவர்களைப் பற்றி கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்துகொள்ளும் படி எழுதப்பட்ட திரைக்கதை நம்மை பல்வேறு கோணங்களில் சிந்திக்க வைத்தது.

தற்காலத்தில் நம்முடன் சேர்ந்து வாழும் காட்டுமிராண்டிகள் , நமக்குள் இருக்கும் காட்டு மிராண்டி தனங்கள், பெண்கள் குறித்த பிற்போக்கான பார்வை போன்றவற்றை கிளாஸ் எடுக்காது கிளாசிக் காட்சிகளாய் கடத்தியிருந்தது நம் ரசனைக்கு தீனி போடும் விதமாக இருந்தது.

ஜனரஞ்சக சினிமாவில் கடைபிடிக்க முடியாத ஒரு திரைமொழியை கையில் எடுத்து அதற்குள் வெகுஜன பார்வையாளர்களை சிரிக்க வைப்பது, கை தட்ட வைப்பது அவ்வளவு எளிதில் நடந்தது அல்ல என உணர முடிந்தது.

விரிவான விமர்சனம் :

Soori's Kottukkaali Movie Review

படாமெங்கும் இருந்த பல்வேறு டிராக்கிங் ஷாட்கள் நம்மை திரைக்குள்ளே நிகழும் வாழ்விற்குள் கொஞ்சம் கொஞ்சமாக இணைக்கும் படி கையாளப்பட்டிருந்த திரைமொழி பு. எஸ். வினோத் ராஜின் தனிச் சிறப்பு. ஒரு கதாபாத்திரத்தின் நோக்கம், முன் கதை ஆகியவற்றை அந்த கதாபாத்திரத்தின் நடவடிக்கை மூலமே நாம் புரிந்துகொள்ளும் படி எழுதப்பட்டிருந்த விதம் பார்வையாளர்களின் மதியை இயக்குநர் மதிப்பதாகவே பட்டது.

படத்தின் முதன்மையான பிளஸ் பாயின்ட் நடிகர்களின் நடிப்பு. சூரி, ஆனா பென் தொடங்கி ஊர்க்காரர்களாக நடித்த அத்தனை பேரும் மிக இயல்பாக திரையில் உள்ளனர். குறிப்பாக, ஆதிக்க சமூகத்தில் பிறந்த மடத் தனமான கோபம் கொண்ட இளைஞராகவே திரையில் தெரிகிறார் சூரி. அவர் எந்த அளவுக்கு அந்த கதாபாத்திரத்தை உள்வாங்கியுள்ளார் என்பதற்கு ஒரு பெரிய களேபிர காட்சிக்குப் பிறகு அவர் நடக்கும் நடையே சான்று.

பல்வேறு உணர்ச்சிகளை தனக்குள் பூட்டி வைத்து கண்களால் மட்டுமே பல்வேறு மொழி பேசும் ஆனா பென், குடும்பம் எனும் வலைக்குள் தங்களுக்கான பெருமைகளை தேடி வாழும் சூரின் அக்கா, தங்கை, எதுவும் செய்ய இயலாது தவித்து நிற்கும் ஆனா பென்னின் பெற்றோர், ஆதிக்க நிலையின் உச்சத்தில் இருக்கும் சூரியின் அப்பா என ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மன நிலையும் நாமே அவர்களுடன் பயணித்து தெரிந்துகொள்வதாய் அமைக்கப்பட்டிருந்தது.

ஒளிப்பதிவாளர் சக்தி வேலின் பல்வேறு நீண்ட நெடிய காட்சிகள் அந்த வாழ்வியலை பற்றியும், அந்த பயணத்தின் உணர்வையும் நமக்குள் கடத்துகிறது. ஆனால், ஒரு சில ரிப்பீட் காட்சிகள் சற்று அயர்ச்சியைத் தருவதும் உண்மையே. இசை வேண்டாம் என முடிவெடுத்தது படத்தின் எதார்த்த தன்மைக்கு வழு சேர்க்கிறது. பல மென்சோக காட்சிகளுக்காக இடங்களையும் தவிர்த்துள்ளார் இயக்குநர் வினோத் ராஜ். இந்தப் படத்தின் நோக்கம் சரி, தவறு என்கிற தீர்மானங்களை தாண்டி நடப்பதை நம்மிடத்தில் காண்பிப்பதே. அதற்குள் இருக்கும் நியாயங்களை நாமே உணர்ந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற கதைகளில் முறையான தீர்வு தராது மக்களிடத்தில் அதை ஒப்படைப்பது குறித்து பலருக்கு விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால், இதை இப்படியான ஒரு மொழியில் சொன்னதே இந்தப் படத்தின் தனிச் சிறப்பு.

Soori's Kottukkaali Movie Review

கால்கள் கட்டிய சேவல், சிறுமிக்கு அடங்கும் காளை, ஆட்டோவை அப்படியே திருப்பி போடும் ஆண்கள், என படமெங்கும் பல உவமைக் காட்சிகள் இடம்பெறுகின்றன. நீண்ட நெடிய டீகோடிங் கட்டுரை எழுதுபவர்களுக்கு நல்ல கண்டேண்ட் கிடைத்துள்ளது. ஆனால், இப்படியான திரை மொழி கொண்ட ஒரு முழு நேர படத்தில் சில உவமைகளை தவிர்த்திருக்கலாம் என்றே தோன்றியது. ஏனெனில் நமக்கு அது நன்றே புரிந்த பிறகும் அதை மீண்டும் மீண்டும் பார்ப்பது சுவாரஸ்யம் தரவில்லை.

Soori's Kottukkaali Movie Review

கதாபாத்திரங்கள் பேசும் மதுரை வட்டார வழக்கு , எதார்த்த வசனங்களுக்கு திரையரங்குகளில் பலத்த கைதட்டல்களை காண முடிந்தது. இந்தப் படத்தின் சுவாரஸ்யத்தை கூட்டுவது இதுபோன்ற சில காட்சிகளே. சாதி வெறி, ஆண் ஆதிக்கம், கல்வியின்மை, மூட நம்பிக்கை, ஆணவ கொலை, பழமைவாதம் , உறவுகளுக்குள் பின்னிக் கிடக்கும் அடக்குமுறை எனப் பல்வேறு விஷயங்களை முன்னர் கூறியது போல கிளாஸ் எடுக்காமல் கிளாசிக் காட்சிகளாக்குகிறது ' கொட்டுக் காளி '. மொத்தத்தில் இது போன்ற கலைப் படங்களை பார்க்காத பார்வையாளர்களை கூட ஓரிரு இடத்தில் ஆவது சுவாரஸ்ய படுத்தவும், சிந்திக்க வைக்கவும் தவறாது இந்த ' கொட்டுக்காளி '. அவசியம் தியேட்டரில் கண்டு அனுபவத்தை பெறுங்கள்.

- ஷா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

மீண்டும் இணையும் குருவாயூர் காம்போ!

சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டம்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

உலகின் வலிமையான புட் பிராண்ட் அமுல்… சாதித்தது எப்படி?

மேகா ஆகாஷுக்கு டும் டும் டும்… மாப்பிள்ளை யாரு தெரியுமா?

ஜாபர் சேட் வழக்கில் திடீர் திருப்பம்!

Comments

Popular posts from this blog

"பாடகி சுசித்ரா மனநோயாளி": மறைமுகமாக சாடிய வைரமுத்து

மலையாள சினிமா போல தமிழ் திரையுலகிலும் ஏராளமான பாலியல் சீண்டல்கள் நடப்பதாக பாடகி சுசித்ரா அண்மையில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் குற்றச்சாட்டை முன்வைத்தார். குறிப்பாக கவிஞர் வைரமுத்து மீது சுசித்ரா கூறிய  புகார்கள் கோலிவுட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியது. வைரமுத்து குறித்து சுசித்ரா கூறியதாவது, ''மே மாசம் 98-ல் மேஜர் ஆனேன் பாடலை பாடியபோது கவிஞர் வைரமுத்து தனக்கு  போன் செய்தார். உங்கள் வாய்ஸ்ல ஒரு காமம் இருக்குமா , அதைக்கேட்டால் காதல் வருதும்மா என்று கூறினார். பின்னர், ஒருமுறை பரிசு கொடுக்க வேண்டும் என்று என்னை வீட்டுக்கு அழைத்தார்.  நான் எனது  பாட்டியுடன் வந்ததை பார்த்ததும் நீங்க தனியா வருவீங்கனு நினைச்சேன் என்று வைரமுத்து சொன்னார். அப்போது, அவரிடத்தில்  ஏதோ பரிசு தரப்போகிறேன்னு சொன்னீர்களே என்று நான் கேட்டேன்.  இந்த கேள்வியை எதிர்பார்க்காத அவர்,   வீட்டில் இருந்து இரண்டு ஷாம்பூ பாட்டில்களை எடுத்து வந்து கொடுத்தார்'' என்று தெரிவித்திருந்தார். வாழ்வியல் தோல்விகளாலும் பலவீனமான இதயத்தாலும் நிறைவேறாத ஆசைகளாலும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி அதன் உ...

மகன் திருமணம்: ரூ.2.5 கோடியில் புதிய கார் வாங்கிய நாகர்ஜூனா

தெலுங்கு சினிமா உலகில் அடுத்த பிரம்மாண்ட திருமணமாக நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலா இடையே டிசம்பர் 4 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இருவரும் டேட்டிங்கில் இருந்து வந்த நிலையில் நாளை இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். முன்னதாக நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து, பின்னர் பரஸ்பரம் பிரிந்தனர். நாளை நடைபெற உள்ள நாக சைதன்யாவின் திருமணம் தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருமணத்தை முன்னிட்டு தனது மகன் நாகசைதன்யாவுக்கு பரிசாக கொடுப்பதற்காக 2.5 கோடி மதிப்புள்ள லக்ஸஸ் எல்.எம். எம்.பி.வி காரை நாகர்ஜூனா வாங்கியுள்ளார். மெருண் வண்ணத்திலான இந்த காரை நாகர்ஜூனாவே ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு ஓட்டி வந்து பதிவு செய்தார். 7 சீட்டர் கொண்ட இந்த கார் எலக்ட்ரிக் ரகத்தை சேர்ந்தது. இந்த காரின் அடிப்படை விலை 2.1 கோடி ஆகும். நாகர்ஜூனாவிடத்தில் ஏராளமான கார்கள் உள்ளன. ஏற்கனவே, அவரிடத்தில் கியா EV6, பி.எம்.டபிள்யூ 7-சீரிஸ் ஆடி ஏ 7, பி.எம். டபிள்யூ எம் 6, டொயட்டோ வெல்ஃபயர் , நிஸ்ஸான் ஜி...

விமர்சனம் : மழை பிடிக்காத மனிதன்!

  உதயசங்கரன் பாடகலிங்கம் கவிதைக்காரனா? ஆக்‌ஷன் ஹீரோவா? தமிழ் திரையுலக நாயகர்களில் சிலரது படங்கள் நிச்சயம் வித்தியாசமான அனுபவத்தைத் தரும் என்று சொல்லத்தக்கதாக இருக்கும். அப்படியொரு எதிர்பார்ப்பை உருவாக்கும் அளவுக்கு, அவர்களது முந்தைய படங்கள் ரசிகர்களிடத்தில் தாக்கம் ஏற்படுத்தியிருக்கும். அந்த வகையில் விஜய் ஆண்டனியின் படங்கள் என்றாலே நிச்சயம் வழக்கத்திற்கு மாறான கமர்ஷியல் பட அனுபவத்தைப் பெறலாம் என்று தாராளமாகச் சொல்லலாம். அந்த வரிசையில், ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடித்த ‘மழை பிடிக்காத மனிதன்’ தற்போது ரிலீஸ் ஆகியிருக்கிறது. இந்தப் படமும் வழக்கமான விஜய் ஆண்டனி படம் போல அமைந்திருக்கிறதா? நல்லதொரு கமர்ஷியல் படம் பார்த்த திருப்தியைத் தருகிறதா? எப்படிப்பட்ட காட்சியனுபவத்தைத் தருகிறது ‘மழை பிடிக்காத மனிதன்’? கவிதையாய் சில காட்சிகள்! ‘மழை பிடிக்காத மனிதன்’ என்ற டைட்டிலை கேட்டவுடன் நமக்குள் என்ன மாதிரியான கதை தோன்றும்? மழையை ஆராதிப்பதுதான் சினிமாவுலக நாயக, நாயகிகளின் வழக்கம். அப்படிப்பட்ட மழையை வெறுக்கத்தக்க அளவுக்கு, நாயகனின் வாழ்வில் ஒரு கொடூர சம்பவம் நிகழ்ந்திரு...